இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகம் மூலமாக சீனா செல்வதற்காக இந்த ஆண்டு இதுவரை 71,600 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் ஜியாவ்ஜியான் தெரிவித்துள்ளார்.
தொழில், படிப்பு, சுற்றுலா, வேலை, குடும்ப சந்திப்பு உள்ளிட்ட காரணத்திற்காக இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. சீன மக்களுக்கான விசா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்குவதையும், இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் பயணம் மீண்டும் தொடங்குவதையும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல் ஐந்து மாதங்களில் 60 ஆயிரம் விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்தில மட்டும் 11,600 பேருக்கு விசா வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என சீனா அறிவித்திருந்தது. இந்தியாவில் இருந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு அனுமதிக்கும் என்று தெரிவித்திருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதிக்குள் வழங்கப்பட்ட விசாக்கள் மற்றும் செல்லுபடியாகும் காலத்திற்குள் இருக்கும் விசாக்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.