டாஸில் வெற்றி பெற்று முதல் ரைடையும் தானே துடங்கினார் பெங்களூர் ரைனோஸ் அணியின் கேப்டன் விபின் மாலிக். அந்த அணியின் ஆறுமுகம் அடுத்தடுத்து சிறப்பான ரைடுகளை செய்து தனது அணிக்கு புள்ளிகளை பெற்றுதந்தார். சிறப்பாக விளையாடிய பெங்களூர் ரைனோஸ் அணியினர் ஆட்டத்தின் முதல் பகுதியிலேயே பூனே ப்ரைட் அணியை ஆல்அவுட் செய்தனர். அந்த பகுதியின் முடிவில் பெங்களூர் ரைனோஸ் 12 புள்ளிகளும் பூனே ப்ரைட் வெறும் 1 புள்ளியை மட்டுமே பெற்றிந்தனர். இரண்டாவது பகுதியிலும் சிறப்பாக ரைட் செய்து புள்ளிகளை அள்ளினார் பெங்களூர் ரைனோஸ் அணியின் ஆறுமுகம். பூனே ப்ரைட் அணியின் கேப்டன் அப்துல் ஷேக் சிறப்பான சூப்பர் ரைட் செய்து தனது அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுதந்தார். அது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. அதிரடியாக விளையாடிய பூனே ப்ரைட் அணியினர் பெங்களூர் ரைனோஸ் அணியை ஆல்அவுட் செய்தனர். இரண்டாவது பகுதியின் முடிவில் பூனே ப்ரைட் அணி 14 புள்ளிகளும் பெங்களூர் ரைனோஸ் அணி 18 புள்ளிகளும் பெற்றிந்தனர்.
ஒரு அணியில் குறைந்தபட்சம் ஆறு வீரர்கள் உள்ளபொழுது எதிரணி ரைடருக்கு போனஸ் பாயிண்ட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு அணியில் குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு குறைவான வீரர்கள் உள்ளபொழுது எதிரணி ரைடரை வீழ்த்தினால் 2 புள்ளிகள் கிடைக்கும். இதை சூப்பர் டாக்கிள் என்று அழைப்பார்கள்.
மூன்றாம் பகுதியில் இரு அணிகளும் புள்ளிகளை எடுக்க முடியாமல் தடுமாறிய போது அசத்தலாக சூப்பர் ரைட் ஒன்றை நிகழ்த்தினார் பெங்களூர் ரைனோஸ் அணியின் ஆறுமுகம், அந்த பகுதியின் முடிவில் பூனே ப்ரைட் அணி 20 புள்ளிகளும் பெங்களூர் ரைனோஸ் அணி 24 புள்ளிகளும் பெற்றிந்தனர். ஆட்டத்தின் இறுதி பகுதியை அதிரடியாக தொடங்கிய பூனே ப்ரைட் அணியினர் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து ஆட்டத்தில் முதல் முறையாக லீடை எடுத்தார்கள். இரு அணிகளும் மாற்றி மாற்றி புள்ளிகளை எடுக்க ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக சென்றது. இறுதியில் 32 புள்ளிகளை பெற்று பிரமாதமான கம்பேக் வெற்றியை பெற்றனர் பூனே ப்ரைட் அணியினர். இந்த வெற்றிக்கு இருந்தவர் அந்த அணியின் வெங்கடேஷா. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் ரைனோஸ் அணி 29 புள்ளிகளை பெற்று தோல்வி அடைந்தது.
IIPKLன் நாளைய ஆட்டங்கள் – திலேர் டெல்லி vs மும்பை ச்சே ராஜே அணிகளும், சென்னை சேலஞ்சர்ஸ் vs தெலுகு புல்ஸ் அணிகளும் மோதுகிறார்கள். இந்த ஆட்டங்களை டி ஸ்போர்ட், டிடி ஸ்போர்ட்ஸ், எம் டிவி மற்றும் எம் டிவி எச் டி + சேனல்களில் 8 மணி முதல் நேரலையில் காணத்தவறாதீர்கள்.