இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – காலியிறுதியில் சிந்து தோல்வி
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனையான சயாகா டகாஹாஷியாவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிவி சிந்து முதல் செட்டை கைப்பற்றினார். ஆனாலும் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை சயாகா 2வது, 3வது சுற்றுக்களை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், பிவி சிந்து 21-16, 16-21, 19-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.