இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான இந்த நிலநடுக்கத்தை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையில் சிக்கி 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.