X

இந்துக்களுக்கு ஆபத்து – மேர்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று பீகார் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நேற்று நடந்த மக்களவை பட்ஜெட் கூட்டத்தில் பேசிய அவர், வங்காளதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

வங்காளதேசத்தில் இருந்து வந்து பழங்குடியின சமூகங்கள் அதிகம் வாழும் குடியேறிய இஸ்லாமியர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொள்வதால் , இந்து மதத்தினர் வாழும் கிராமங்கள் முற்றிலுமாக காலியாகும் சூழல் உள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்.

நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன். எனவே வங்க தேசத்தினர் நாட்டுக்குள் நுழையும் பகுதிகளான மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா, முருஷிதாபாத் மாவட்டங்களையும், பிகாரில் உள்ள கிஷன்கஞ்ச், ஆராரியா, கதிஹார் மாவட்டங்களையும், ஜார்கண்ட் பகுதிகளையும் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் இந்துக்கள் மறைந்துபோவார்கள். மேலும் வெளிநாட்டினர் ஊடுருவலைத் தடுக்கும் தேசிய குடிமைகள் பதிவேடான NRC யை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.