இந்தி மொழி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது – வைரமுத்து
மத்திய அரசு இந்தி மொழியை நாடெங்கிலும் திணிக்க முயற்சிப்பது குறித்து கடுமையான எதிர்ப்பு குரல் ஆங்காங்கே எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் அலுவல் மொழியாக இந்தியை மத்திய அரசு மாற்றியிருக்கிறது.
மருத்துவமனை சார்பாக கொடுக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இந்தி மொழியிலேயே கையாளத் தொடங்கி இருக்கிறது. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. கவிஞர் வைரமுத்து இது குறித்து டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது வருந்துகிறோம். இந்தி படிப்போரை வெறுக்க மாட்டோம். திணிப்போரை ரசிக்க மாட்டோம். ஒரு மைப்பாடு சிறுமைபடாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுக்காக்கப்பட வேண்டும். சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று, ஒட்டகம் நுழையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.