X

இந்தி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலமும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் இந்தி சீரியல்களில் நடித்துவந்த இளம் நடிகை பிரேக்ஷா மெஹ்தா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அக்ஷய் குமாரின் பேடுமேன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

நடிகை பிரேக்ஷா மெஹ்தா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிநெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 25 வயதே ஆன இளம் நடிகை ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.