X

இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர் கொரோனாவால் பலி

இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார். இளம் வயதில் நடிகை ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.