X

இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் – வைரலாகும் வீடியோ

தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. ப்ரோமோ வடிவிலான வீடியோ மூலம் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், இந்திரா காந்தியைப் போன்ற தோற்றத்துடன் கண்ணாடி அணிந்து கொண்டு காட்டன் சேலையில் காணப்படுகிறார் கங்கனா ரணாவத். வசனங்கள் பேசும் பொழுது உதட்டை உள்ளிழுப்பது என இந்திரா காந்தியின் உடல் மொழியை பிரதிபலிக்க முயன்றுள்ளார்.

‘எமர்ஜென்சி’ படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.