மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘எமெர்ஜன்ஸி’ என்ற படம் தயாராகிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார்.
தற்போது இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
அவர் பதிவில், ”ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய பயணத்தின் அழகிய தொடக்கம். இன்று நாங்கள் ‘எமர்ஜென்ஸி’ படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக உடல், முகம் பரிசோதனையின் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தக் கனவை நனவாக்க பல்வேறு அற்புதமான கலைஞர்கள் ஒன்றிணைய உள்ளனர். இது மிகவும் சிறப்புமிக்க ஒரு பயணமாக இருக்கப்போகிறது” இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.