இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வருகிறது.
முதல் போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியாவுக்கு வருவதற்காக விமானம் ஏறியுள்ளனர்.
விமானம் ஏறுவதற்கு முன் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது படம் ஒன்றை போஸ்ட் செய்து ‘‘நாங்கள் இந்தியா வருகிறோம்… 3 போட்டிகள் கொண்ட தொடர் சிறப்பானதாக இருக்க போகிறது. எங்களுடைய அனைத்து இந்திய ரசிகர்களையும் பார்க்க ஆவலாக உள்ளோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த முறை வார்னர் இல்லாமல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 3-2 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.