இந்திய பொருளாதாரம் குறித்து அதிருப்தி தெரிவித்த பிரணாப் முகர்ஜி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் சர்வதேச பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சர்வதேச பொருளாதார சக்தியாக மாறக்கூடிய திறன் படைத்தது, இந்தியா. இந்திய பொருளாதாரம் தற்போது 2.27 லட்சம் கோடி டாலர் மதிப்புடையதாக (ஒரு டாலர் மதிப்பு ரூ.70.62) இருக்கிறது. இது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. 5 லட்சம் கோடி டாலரில் இருந்து 6 லட்சம் கோடி டாலர் வரை அது இருந்திருக்க வேண்டும். முன்னாள் நிதி மந்திரி என்ற முறையில், இதை சொல்கிறேன். நாம் இன்னும் நிறைய முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.