இந்திய பொருளாதாரம் உயர்ந்ததா? – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்தேகம்!
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இதுபற்றி கூறியதாவது:
இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ‘ஒரு மத்திய மந்திரி, போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் நாம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும். நாம் 7 சதவீத வளர்ச்சி அடையவில்லை’ என்று கூறியது எனக்கு தெரியும்.எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி பெயரை அவர் கூறவில்லை என்றாலும், நிதி மந்திரி அருண் ஜெட்லி தான் இந்த தகவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.