இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு – டயானா எடுல்ஜி கண்டனம்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கும், ஒருநாள் அணி கேப்டனான மிதாலி ராஜி-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ரமேஷ் பவாரின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
புதிதாக பயிற்சியாளரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான நபர்களை தெரிவிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய் கபில்தேவ் உள்பட மூன்று பேர் கொண்ட தற்காலிக கமிட்டியை அமைத்தது. இதற்கு நிர்வாகக்குழுவில் உள்ள மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் வேலை, லேதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ-யில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். ஒருதலைபட்சமாக புதிதாக ஒரு கமிட்டியை அமைத்தது அரசியலமைப்பிற்கு எதிரானது. அவமானகரமான நடைமுறையின்படி பயிற்சியாளரை நியமனம் செய்ததை நான் ஆதரிக்கவில்லை” என்று தனது ஆதங்கத்தை எடுல்ஜி மெயில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.