இந்திய பாராளுமன்ற தேர்தல் தான் மிகப்பெரிய தேர்தல் – அமெரிக்கா பாராட்டு

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம். வரலாற்றில் எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் நடந்ததை விட இதுதான் மிகப்பெரிய தேர்தல்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளும் பா.ஜனதா சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இடம்பெறவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மாத்யு மில்லர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

”இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். அது வாக்காளர் பிரச்சனை. அதுபற்றி இந்திய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools