இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்துடன் சுற்றிய 5 பேர் கைது

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சொகுசு காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.9.88 லட்சம் பணம் இருந்தது.

இதுபற்றி காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து காரில் இருந்த 5 பேரையும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ.9.88 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் குஜராத்தில் வேலை செய்து வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools