8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயமடைந்துள்ளதால் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். எனினும் மூன்று பேரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஷமியின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அவர் அணியில் இடம் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பெர்த்தில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பின்னர் பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்தியா வீரர்கள் அங்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.