Tamilசெய்திகள்

இந்திய படைகள் வெளியேற்றப்படும் – மாலத்தீவின் புதிய அதிபர் அறிவிப்பு

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார். இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது தூதரக வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மொஹமத் முய்சு தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது, அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கோரப்படும். இதுவே எனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரை சந்தித்தேன். அப்போது இந்திய படைகள் வெளியேற்றத்தை வலியுறுத்தினேன் என்றார்.