X

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23 ஆம் தேதி சென்னை வருகிறார்

பாராளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந்தேதி சென்னை வருகிறார். பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகிறார்.

Tags: tamil news