இந்திய டெஸ்ட் அண்யில் இணையும் மயங்க் அகர்வால்

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படிருந்தார். அவர் தற்போது இந்திய அணியில் இணையவுள்ளார். கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் உடல் நலம் பாதிப்படைந்துள்ள நிலையில் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் மயங்க அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார். அகர்வால் ரஞ்சி டிராபியில் 21 டெஸ்ட் போட்டிகளில் 41.33 சராசரியுடன் 1,488 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools