இந்திய சந்தையில் இருந்து விலகும் வோக்ஸ்வேகன்?
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வோகஸ்வேகன் தனது பங்கை விற்க ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கார் விற்பனையில் முன்னணியில் உள்ள மஹிந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்த போதிலும், ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் வெற்றி பெறவில்லை. அதிக விலை காரணமாக இந்திய சந்தையில் வோகஸ்வேகன் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.
ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ஜெல்மர் கூறுகையில், “நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயணித்து வருகிறோம். சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஒரு புதிய பாதையில் முயற்சிக்கவும். சரியான பங்குதாரரை நாம் கண்டுபிடித்தால், ஒருவரையொருவர் கற்றுக்கொண்டு பயனடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.
மேலும், ஐரோப்பிய கார்கள் பெரும்பாலும் அதிக இன்ஜினியரிங் செய்யப்படுகின்றன, அவை இந்தியாவில் தேவைப்படாது. அதிக இன்ஜினியரிங் காரணமாக கார்களின் விலை உயருகிறது. இந்த தயாரிப்புகள் இந்திய சந்தையில் வரும்போது போட்டித்தன்மையை குறைக்கிறது. கலப்பினங்கள் மீதான வரி விகிதங்களை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.