X

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது உத்தரபிரதேச அரசு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.

இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.

Tags: tamil sports