Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் இன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஜெய்ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல் மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.