X

இந்திய கிரிக்கெட் சங்கத்தில் இருந்த இம்ரான் கான் புகைப்படம் அகற்றப்பட்டது

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் உடல் சிதறி, உயிரிழந்தனர்.

இதனால், இந்திய மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடியை சிலர் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படத்தின் மேல் காகிதம் ஒட்டி, அவரது படம் மறைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சுரேஷ் பாப்னா, ‘புல்வாமா தாக்குதல் நடந்த மறுநாளே இம்ரான் கானின் புகைப்படத்தின் மீது காகிதம் ஒட்டப்பட்டது. அந்த படத்தை நிரந்தரமாக நீக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.