Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் மயங் அகர்வால் சேர்ப்பு

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

ஒருநாள் போட்டிகள் வருகிற 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் போட்டிகள் 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் 4 வீரர்கள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவான், ஸ்ரேயாஸ் அய்யர், கெய்க்வாட் மாற்று வேகப்பந்து வீரரான நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஜோஷி, பாதுகாப்பு அதிகாரி லோகேஷ், மருத்துவ சிகிச்சையாளர் ராஜூவ் குமார் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 இந்திய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி தொடங்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டித் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளர். 4 வீரர்களுக்கு கொரோனா இருப்பால் அவர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். தவான், ஸ்ரேயாஸ் அய்யர், கெய்க்வாட் ஆகியோர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.

அணியின் துணை கேப்டனான லோகேஷ் ராகுல் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார்.