X

இந்திய கிரிக்கெட் அணியிடம் வேண்டுகோள் வைத்த சச்சின் டெண்டுல்கர்

india-can-win-in-australia-sachin

இந்திய கிரிக்கெட்டில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி மறக்க முடியாத நாளாகும். எம்எஸ் டோனியின் தலைமையில் இந்திய அணி 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றிய தினமாகும். சச்சின் தெண்டுல்கர் சுமார் 25 வருட காலம் கிரிக்கெட் ஆடினாலும், இந்த உலகக்கோப்பையை மட்டுமே அவரால் கைப்பற்ற முடிந்தது. இதனால் அவருக்கும் இது மறக்க முடியாத நாளாகும்.

இந்நாளில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு வீடியோ மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் அந்த வீடியோவில் ‘‘ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு பிறகும் உலகக்கோப்பை தொடர் வருகிறது. இந்திய அணி கடந்த ஏப்ரல் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி உலகக்கோப்பையை வென்றபின் 8 வருடங்கள் கழித்து தற்போது விளையாட இருக்கிறோம். நமது இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், எந்த அணி சென்றாலும், அது நம்முடைய அணியாக இருக்கும்.

நீங்கள் கவனமாக பார்த்தீர்கள் என்றால், இந்திய வீரர்களின் ஜெர்சியில் பிசிசிஐ லோகோவின் மேல் மூன்று ஸ்டார்ஸ் இருக்கும். மூன்று ஸ்டார்ஸும் மூன்று உலகக்கோப்பையை குறிக்கும். தற்போது நாம் மூன்றை நான்காக மாற்ற வேண்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன். இந்த அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags: sports news