இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி – அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்?

இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன. கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும். ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools