இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடல் உருவாக்கிய ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

இந்த பணிகளுக்கு இடையே மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார்.

சினிமா மற்றும் சமூக பணிகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியின் வெற்றிக்காக ஒரு ஆன்தம் பாடலை உருவாக்கி இருக்கிறார்.

இந்த பாடல் இன்று இந்தியாவின் முதல் போட்டியின்போது வெளியாக இருக்கிறது. கிரிக்கெட் போட்டியின் நேரலையின்போது இதன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பாடலின் சில வரிகள் கொண்ட புரோமோ (முன்னோட்டம்) ரிலீசாகி சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools