இந்திய ஆய்வாளரின் பெயரை தன் மகனுக்கு வைத்த எலான் மஸ்க் – மத்திய அமைச்சர் தகவல்

டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்-இன் குடுபத்தில் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சமீபத்தில் சந்தித்து பேசிய எலான் மஸ்க், இது குறித்த தகவலை தெரிவித்தார். பிரிட்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த பதிவில், “பிரிட்டனில் நடைபெற்ற ஏ.ஐ. பாதுகாப்பு கருத்தரங்கில் யார் கலந்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயரிட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். 1983-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் எஸ் சந்திரசேகரை தழுவி இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க் மனைவி ஷிவோன் ஸில்லிஸ், “இது உண்மை தான். நாங்கள் அவனை சுருக்கமாக சேகர் என்று அழைக்கிறோம், ஆனால் இந்த பெயரை சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக வைத்திருக்கிறோம்,” என்று குறிப்பிட்சுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news