X

இந்திய ஆக்கி வீரர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக பேசி வாழ்த்து தெரிவித்தார்

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய ஆக்கி அணி சாதனை புரிந்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஆக்கி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

அதோடு அவர் செல்போன் மூலம் வீரர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மோடி, ஆக்கி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.