இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்ய வேண்டும் – கவுதம் காம்பீர் கருத்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடைசி ஒருநாள் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் காம்பீர் கூறியதாவது:-
பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.