ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி நியமிக்கப்பட்டுள்ளார். டோனி இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க சம்மதித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆலோசகராக செயல்பட கட்டணம் எதுவும் வேண்டாம் என எம்.எஸ்.டோனி கூறிவிட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதேபோல், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆலோசகராக செயல்பட டோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.