அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், வெற்றியுடன் கூடிய அருமையான தொடக்கத்தை கொடுத்து 2003-ம் ஆண்டில் அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றியை இந்திய அணியினர் நினைவுப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய அணியினருக்கு எனது பாராட்டுக்கள். இந்திய அணியினர் இந்த உற்சாகத்தையும், அழுத்தத்தையும் ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.
இரு இன்னிங்சிலும் முக்கியமான கட்டத்தில் புஜாராவின் பேட்டிங் அருமையாக இருந்தது. 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் செய்து இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.