X

இந்தியா – பூடான் எல்லையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சிக்கியது

அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பூடான் எல்லைப்பகுதியில் ஆயுதக் கடத்தல் நடப்பதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுவதற்காக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப்பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று நடந்த இந்த சோதனையின்போது லியோனா நளா மற்றும் அல்டாபானி நளா ஆகிய இடங்களில் ஏராளமான துப்பாக்கிகள், மேகசின்கள் மற்றும் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.