X

இந்தியா, பாகிஸ்தான் போட்டி இல்லாத சாம்பியன்ஷிப் அர்த்தமற்றது – வக்கார் யூனிஸ் கருத்து

ஐசிசி புதிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

டெஸட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி கிடையாது. இந்த போட்டி அல்லாத சாம்பியன்ஷிப் எந்தவித அர்த்தத்தையும் ஏற்படுத்தாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் To கிரிக்கெட், மத்திய அரசு T20 மத்திய அரசு என்பதில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடினமான சூழ்நிலை உள்ளது என்பது எனக்குத் தெரியும். சாம்பியன்ஷிப்பில் ஐசிசி இன்னும் அதிக அளவில் துடிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தில் ஐசிசி தலையிட்டு சில விஷயங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான ஆட்டம் இல்லை என்றால் சாம்பியன்ஷிப் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தாது.

இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி எப்போதுமே சிக்கலாகவே உள்ளது. இதனால்தான் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அறிமுகம் மறக்க முடியாததாக உள்ளது. இந்தியா கடந்த சில வருடங்களாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருகிறது.

கடந்த காலங்களில் இதுபோன்று பார்க்க முடியாது. தற்போது அது மாறியுள்ளது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதுதான் இந்தியா டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறது’’ என்றார்.

Tags: sports news