இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது? – சவுரவ் கங்குலி பதில்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் 23-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
தற்போதில் இருந்தே பிசிசிஐ முன்னேற்றத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடத்த முயற்சி எடுக்கப்படுமா? என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு கங்குலி பதில் அளிக்கையில் ‘‘நீங்கள் இந்த கேள்வியை இந்திய பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம்தான் கேட்க வேண்டும்.
உண்மையிலேயே நாங்கள் அனுமதி வாங்க வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டு தொடர் என்றால் மத்திய அரசு மூலம்தான் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது’’ என்றார்.