Tamilவிளையாட்டு

இந்தியா தொடருக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் அறிவிப்பு

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் 2-வது டெஸ்ட் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் நடக்கிறது. 3-வது போட்டி நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் நடைபெறுகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கிறது.

சிட்னியில் திடீரென கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அருகில் உள்ள மாநிலங்கள் சிட்னியில் இருந்து வரும் நபர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சிட்னி எல்லைகளை மூட உள்ளது.

விக்டோரியா மாநிலம் சிட்னியில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்கள் கோரன்டைனில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனால் சிட்னியில் இருந்து வார்னர், சீன் அப்போட் முன்னதாகவே மெல்போர்ன் வந்துவிட்டனர்.

மெல்போர்ன் போட்டி முடிந்த பின், சிட்னியில் போட்டி நடைபெற்றால் அதன்பின் குயின்ஸ்லாந்து மாநிலம் செல்வது கடினம். ஆகையால் 2-வது மற்றும் 3-வது போட்டி மெல்போர்னில் நடக்கலாம். இல்லையெனில் 3-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் நடக்கலாம். அப்படியும் இல்லை என்றால் அடிலெய்டில் 3-வது போட்டி நடத்தப்படலாம் என் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், சிட்னியில் ஏற்கனவே போட்டி நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.