இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாட்டுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இரு அணிகளும் தர்ம சாலாவில் மோத இருந்த முதல் 20 ஓவர் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் (20 ஓவர், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட்) கைப்பற்றி இருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

இதேபோல தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய ஐந்து 20 ஓவர் தொடரையும் வென்று இருந்தது. இதனால் அந்த அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

இந்தியாவின் பேட்டிங்குக்கும், தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். முதல் வெற்றியை பெறபோவது இந்தியாவா? தென்ஆப்பிரிக்காவா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இரு அணிகளிலும் இடம் பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான் அல்லது ராகுல், மனீஷ்பாண்டே, அல்லது ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பந்த், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ராகுல் சாகர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தென்ஆப்பிரிக்கா: குயின் டன் டிகாக் (கேப்டன்), ஹென்ட்ரிக்ஸ், வான்டர் டூசன், பவுமா, மில்லர், பெகுல்வாயோ, பிரிடோ ரியஸ், பிஜோர்ன் அல்லது லின்டோ, ரபடா, ஜுனியர் டாலா அல்லது அன்ரிச், தபரிஷ் ‌ஷம்சி.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news