ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஹராரேவில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.