இந்தியா கால்பந்தாட்டத்தில் பெயர் வாங்காதது வருத்தமளிக்கிறது – ரஜினிகாந்த் பதிவு
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரகாக இருக்கும் ரஜினியின் ரசிகர் ஒருவர் கால்பந்து அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் ஃபுட்பால் அகாடமி வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. முதல்ல நம்ம இந்தியாவுல அது ரொம்ப பாப்புலரா இருந்தது.
அதன் பின்னர் கிரிக்கெட் வந்து அது டாமினேட் செய்து விட்டது. இப்போது கேரளா, கொல்கத்தாவில் ஃபுட் பால் அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. இப்போ ஃபுட் பாலோட விழிப்புணர்வு ரொம்ப அதிகமா இருக்கு. கடைசியாக நடந்த உலககோப்பை ஃபுட் பால் போட்டியை பார்க்காதவர்களே கிடையாது. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி எல்லோருடைய ஹீரோவாக ஆகிட்டார்.
ஃபுட் பால் ஸ்கில்லோடு ஆடக்கூடிய ஒரு வீர விளையாட்டு, அற்புதமான விளையாட்டு. சின்னச் சின்ன நாடுகள் கூட ஃபுட் பால் விளையாடி உலக அளவுள்ள அந்த நாட்டை பற்றி தெரிய வச்சிருக்கு. ஆனால் இந்தியா ஃபுட் பால் விளையாட்டில் இன்னும் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.
இதற்கு யூத் ஃபுட் பால் அகாடமி நிச்சயம் வரவேற்கத்தக்கது. அவங்களுடைய இலக்கு சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டு மாதிரியான விளையாட்டு வீரர்களை இந்த அகாடமி கொடுக்கணும். இதில் இருக்கக்கூடிய அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்” என்று ரஜினி பேசியுள்ளார்.