X

இந்தியா – இலங்கை இடையிலான முதல் டி20 மழையால் ரத்தானது!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அதனால், போட்டி துவங்குவதற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடையே மழை விட்ட நிலையில் பிச்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதற்கு தொடர்ந்து தாமதம் ஆனது. பின் ஆடுகளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்து அதை காய வைக்கும் முயற்சிகள் அனைத்து தரப்பினரும் மேற்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவம் கிளீனர் வைத்தும் காய வைக்க முடியாமல், அயன் ஃபாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி நடைபெற்றது.

இதன் மூலமும் ஆடுகளத்தை குறித்த நேரத்திற்குள் தயார்செய்ய முடியவில்லை. இதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் , அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sports news