ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தை பகல்-இரவு (Day-Night) டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தி வந்தது. இதுவரை மூன்று பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளும் முழுவதுமாக ஐந்து நாட்கள் நடந்தது. கிடையாது. டே-நைட் போட்டியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து ஸ்விங் ஆவதற்கு ஏற்றபடி ஆடுகளம் பராமரிப்பாளர்கள் பிட்ச்-ல் அதிக அளவு புற்கள் வைத்திருந்தார்கள்.
இந்தியா பகல்-இரவு டெஸ்டிற்கு தயாராகவில்லை என்பதால் இந்த முறை பகல் டெஸ்டாக நடக்கிறது. பகல் டெஸ்டின்போது ‘ரெட்’ பந்து பயன்படுத்தப்படும். பிட்ச்-யில் குறைந்த அளவு புற்கள் இருந்தாலே பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இந்நிலையில் அடிலெய்டு டெஸ்டின்போது பிட்ச்-யில் புற்கள் அதிக அளவு இருக்கும் என பராமரிப்பாளர் டேமியன் ஹாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அடிலெய்டு பிட்ச் குரேட்டர் ஆன டேமியன் ஹாக் கூறுகையில் ‘‘நாங்கள் பிங்க் பந்து, ரெட் பந்து என வேறுபடுத்தி பார்ப்பதில்லை. இரண்டிற்கும் ஒரே மாதிரியான தயார்படுத்துதல்தான். ஒரேயொரு வித்தியாசம்தான். முன்னதாக பிட்ச் மீதான கவர் நீக்கப்பட்டு, முன்னதாக ஆரம்பிக்கப்படும்.
உள்ளூர் தொடரான ஷீல்டு லெவனல் போட்டிக்கு நாங்கள் ரெட் பந்து அல்லது பிங்க் பந்து போட்டிக்கு ஒரே மாதிரியான பிட்ச்-தான் தயார் செய்கிறோம். ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டாலும் பந்திற்கும், பேட்டிற்கும் இடையில் சிறந்த வகையில் போட்டியாக இருக்கும். தற்போதுதான், புற்கள் ஆடுகளத்தில் எங்கே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
வார்னர், ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. அதே நிலையில் இந்தியாவின் விராட் கோலி ரன்கள் குவித்து வருகிறார். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தால், அது யாருக்கு சாதகமாக அமையும் என்பது போட்டி நடைபெறும்போதுதான் தெரியும்.