உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த் மைதானத்தில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
2008-ம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோரது பேட்டிங்கும், ஆர்.பி.சிங், இர்பான்பதான், கும்ப்ளே ஆகியோரது பந்து வீச்சும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
இந்திய அணி பெர்த் மைதானத்தில் 3 டெஸ்டில் தோற்றுள்ளது. 1977-ம் ஆண்டு பிஷன்சிங்பெடி தலைமையிலான அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும், 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான அணி 300 ரன் வித்தியாசத்திலும், 2012-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இன்னிங்சில் மற்றும் 37 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.
ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் 44 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றி பெற்றது.
11 டெஸ்டில் தோற்றது, 8 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது.
ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 735 ரன் குவித்ததே (2003) இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 400 ரன் குவித்ததே அதிக பட்சமாகும்.
பாகிஸ்தான் 62 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். ஆஸ்திரேலிய அணி 76 ரன்னும், இந்தியா 141 ரன்னும் குறைந்தபட்சமாக எடுத்தன.