இந்தியா, அமெரிக்கா உறவு முன்பைவிட வலுபெற்றுள்ளது – பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது.
பின்னர் ஆர்டர் செய்த மருந்துப் பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டதையடுத்து ஏற்றுமதி தடையை இந்தியா தளர்த்தியது. இதனால் பிரதமர் மோடிக்கு டரம்ப் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், நெருக்கடியான நேரங்கள்தான் நெருக்கத்தை அதிகப்படுத்தும் என்ற அதிபர் டிரம்பின் கூற்றை ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
‘இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு முன்பைவிட வலுவடைந்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும், ஒன்றாக சேர்ந்து இதை நாம் வெல்வோம்’ என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.