இந்தியாவுடனான தோல்விக்கு நான் தான் காரணம்! – ஆரோன் பிஞ்ச்

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு. வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே தோல்விக்கு காரணம். எனது ஆடும் உத்தியில் தவறுகளை களைய வேண்டும். எனது ஆட்டத் திறமையை மேம்படுத்த வேண்டும். கேப்டனாக நான் சரியாக விளையாடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் டெஸ்ட் தொடரில் 96 ரன்களும், ஒரு நாள் தொடரில் 26 ரன்களும் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவர் 3 முறையும், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்தார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools