Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு கொரோனா உதவித் தொகையாக ரூ.37 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.