இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கேப்டன் டோனி தான் – சுரேஷ் ரெய்னா

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

டோனி நடக்க உள்ள ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும் இடம் பெற்று உள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வரும் “தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி”யில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-

எதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான் .

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும். இப்போது எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும்.

இந்த ஆண்டு எங்கள் அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர். பியூஷ் இருக்கிறார், பின்னர் எங்களிடம் ஹேசல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர் அருமையாக பந்து வீசுகிறார். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவை அணியை வைத்துள்ளோம். என கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news