X

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் – ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 173 ரன்கள் எடுத்துள்ளது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார். விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள்.

இந்தியா 102வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார்.

இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

இந்நிலையில், 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் 3 ரன்களோடும் , குனமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர் ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.