இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 159/4

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

சுப்மன் கில் 21 ரன்னிலும், விராட் கோலி 22 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும் அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணியின் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், மோர்பி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். லபுசாக்னே 31 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து, 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools