Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 58 ரன்கள் எடுத்தார். புஜாரா 53 ரன்களும், ஹனுமா விகாரி 40 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மார்க்ராம் 31 ரன்களும், பீட்டர்சன் 28 ரன்களும் சேர்க்க, 3ஆம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற மேலும் 122 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால், இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.